சம்பியனானது புனித லூசியா அணி!

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் நீயூஸ்டார் உயிலங்குளம் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 9 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2024 ல் சம்பியனானது புனித லூசியா அணி.

04.08.2024 இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் புனித லூசியா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து யூனியன் விடத்தல்தீவு அணி மோதியது. விறுவிறப்பான ஆட்டத்தில் 3- 0 என்ற கோல் கணக்கில் எமது புனித லூசியா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியன் ஆகியது.

இதன் படி புனித லூசியா அணி சார்பாக சானுஜன் ஒரு கோலினையும் நிலுக்சன் இரண்டு கோல்களையும் பெற்று கொடுத்தார்கள் ஆட்ட நாயகன் மற்றும் தொடராட்ட ஆட்ட நாயகனாக நிலுக்சன் தெரிவு செய்யப்பட்டார்.

மற்றும்  சிறந்த மத்தியகள வீரனாக தயன்சனும் சிறந்த கோல் காப்பாளராக சதுஷியனும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

புனித லூசியா அன்னைக்கு நன்றி