கனடாவில் சாதித்து வரும் பள்ளிமுனை மைந்தன்!

கனடாவில்  சாதித்து வரும் பள்ளிமுனையின் மைந்தன் நோபேர்ட் அன்ரனி. கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் பிரம்ரன் நகரத்தில் தினுசா ரேக்  அவுட் உணவகம் மற்றும் சிறு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் கனடாவிற்க்கு வரும் போது வெறுகையுடனே வந்தவர் என்பதும் அவரது முயற்சியினால் இன்று கனடாவின் பிரம்ரன் நகரில் மிகச்சிறந்த உணவகமாக காணப்படுவதும் சிறப்பாகும்.

பள்ளிமுனை மைந்தன் என்ற வகையில் கிராமத்திற்கான  முன்னேற்றதிற்காக பல சேவைகளை செய்வதோடு மட்டமல்லாமல் இன்னும் பல சேவைகள் செய்ய காத்திருக்கின்றார்.இன்றைய கனடாவின் வேலை வாய்ப்பு அற்ற நேரத்தில் இன்றும் பலருக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளார்.

அண்மையில் கனடாவில்  ஒன்ராரியோ ஆளுனர் உரையாற்றும் போது கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களது பங்கு மிக முக்கியமானது என்றும் தனக்கு அவர்களை கண்டால் ஆச்சரியமாக உள்ளது ஏனென்றால் வெறும் கையுடன் வந்தவர்கள் தங்களது முயற்சியால் இந்த நிலையை அடைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தமையானது எங்களது பள்ளிமுனை மைந்தனது பங்களிப்பும் அதில் உள்ளதை நாம் பெருமை கொள்ள வேண்டும்.