பள்ளிமுனையில் வாழ்ந்த நமது தெய்வங்கள்!

எமது ஊரில் பாரம்பரியமாக கட்டிகாத்த கோவில் சபை என்பது எமது மண்ணை முன்னேற்றி எமது மக்களை வளர்ச்சிப்பாதையில் செல்ல வைத்தவர்கள்.அதே போல வெளி நாடுகளிலிருந்தும் எமது மண்ணுக்கு வந்த குருவானவர்கள் நமது மண்ணுக்கு பல பணிகளை ஆற்றியவர்.

இந்த குருவானவர்களில் முதன்மையானவர் வணக்கத்திற்க்குரிய சேப்கா பாதர் இவர் சேப்கா புரம் என்ற கிராமத்தை அமைத்து 41 வீடுகளை அனைத்து கொடுத்தவர் அத்தோடு பள்ளிமுனையின் முதல் வீதியாக சேப்கா வீதியையும் அமைத்துக்கொடுத்தவர் இவ்வாறான எமது மண்ணைக்காத்த குருவானவர்களை மதித்து அவர்கள் நினைவில் வாழ்வோம்.