அன்பார்ந்த பள்ளிமுனை மக்களே எமது மண்ணுக்கு இரண்டு கண்களாக இருப்பது ஒன்று புனித லூசியா அன்னை ஆலயம் மற்றது புனித லூசியா மகா வித்தியாலயமும் காணப்படுகிறது.இந்த நிலை எமக்கான தாயான புனித லூசியா அன்னையா நாம் இறந்தாலும் மறக்க மாட்டோம் ஆனால் எமது மண்ணில் உள்ள பாடசாலையான புனித லூசியா மகா வித்தியாலயத்தில் எமது பிளைகளை கல்வி கற்க விடாமல் வேறு பாடசாலைக்கு அனுப்புவதன் மூலம் எமது கண்ணை நாமே குற்றுவது போல் ஆகிவிட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக எமது பிள்ளைகளை எமது பாடசாலை விட்டு வேறு பாடசாலைக்கு அனுப்புவதன் மூலம் எமது பாடசாலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து பாடசாலையின் தரமும் குறைந்து எமது மக்களின் கல்வி ஆற்றலும் நலிவடைந்து செல்வதற்கு நாமே காரணமாகிவிடுவோம்.
அன்பார்ந்த பள்ளிமுனை மக்களே எமது தாய் எம்மை பார்ப்பது போல மாற்றான் தாய் எமது பிள்ளைகளை பார்க்க மாட்டார் அது போல தான் எமது பிள்ளைகள் எமது பாடசாலையில் முன்னேறுவது போல வேறு பாடசாலையில் முன்னேறுவது கடினம்.ஆகவே பள்ளிமுனை மக்களே விழிப்போடு இருங்கள் பள்ளிமுனையின் செல்வந்தர்களே எமது பிள்ளைகளுக்குரிய வளங்களை நாமே கொடுத்து நமது பிள்ளைகளையும் நமது மண்ணையும் காக்க தவறினால் நமது கண் ஊனக்கண்ணாக மாறிவிடும்.
நமது பிள்ளைகள் நமது பாடசாலையில் சேர்ப்பதானால் தான் நமது சமய பண்புகளை வளர்க்க முடியும்.இதனால் நமது பள்ளிமுனை இளம் பெற்றோர்களே எமது பாடசாலையில் நமது பிள்ளைகளை கற்க விடுவதோடு மாற்றலாகி சென்ற பிள்ளைகளையும் நமது பாடசாலைக்கு திரும்பவும் சேர்ப்பதன் மூலம் நமது ஒரு கண்ணை பாதுக்காக்க முடியும் பள்ளிமுனை மக்களே விழிப்போடு இருங்கள்!