பாடசாலை மாணவர்களுக்காக உதவி கோரி பள்ளிமுனை பாடசாலை அதிபர்!

பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் உறவுகளே!

அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான வணக்கங்கள் தங்களின் கடந்த கால மேலான பங்களிப்புக்கு பாடசாலை சமூகம் நன்றியுடையதாக எப்போதும் இருக்கும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன்.. தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளினால் அநேகமான பெற்றோர் வறுமையில் வாழ்கின்றமையால் அவர்களின் பிள்ளைகள் உணவு, சீரான உடை மற்றும் பாடசாலை உபகரணங்கள் இன்றி பாடசாலை வருவது மட்டுமில்லாமல் பாடசாலையில் இருந்து இடைவிலகும் அபாயமும் காணப்படுகின்றது இருந்தபோதும் அவர்களை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாடசாலைக்கு வருவதற்குரிய ஒழுங்குகளைச் செய்தாலும் அவர்களுக்கு ஏதாவது விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மற்றும் எதிர்வரும் நாட்களில் ஆண்டின் இறுதியில் நடாத்தவேண்டிய ஒளிவிழா நிகழ்வும் நடாத்தப்படவேண்டியுள்ளது. இதற்கான மேலதிக செலவுக்காக மாணவரிடம் இருந்து நிதியை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றோம். தாங்கள் மனமுவந்து எமது பாடசாலைக்கு உதவ மாணவர்களின் அடிப்படை தேவைகளை ஓரளவு நிறைவேற்ற முடியும் என்பதனை தங்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன் மற்றும் நடைபெறவுள்ள ஒளிவிழா நிகழ்விற்கும் அவ் நிகழ்வினையொட்டி நடைபெறவுள்ள போட்டிகளுக்கு பரிசு பொருட்களை கொள்வனவு செய்யவும் வேண்டியுள்ளது எனவே ஒளிவிழா நிகழ்வுகளுக்காக 40000/= ரூபாவும் வருகின்ற வருடம் நடைபெறவுள்ள O/L பரீட்சைக்காக மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சைகளை நடாத்துவதற்கு 25000/= தந்துவதுமாறு தங்களை பாடசாலை சமூகம் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
முன்வருவீர்களானால் எமது

“இறைவன் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக”
அதிபர்

Principal
MN/ ST. LUCIA’S M. V.
PALLIMUNAI,
MANNAR.