ஒரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார் அவரிடத்தில் முந்திரி தோட்டம் ஒன்று இருந்தது.ஒரு முந்திரி தோட்டத்தில் ஒரு முந்திரி காய்த்திருந்தது அதில் ஒரு முந்திரிகொட்டையும் காய்த்திருந்தது அது அந்த முந்திரிகொட்டை தான் முதலில் வந்தனான் என்று பெரிய தம்பட்ட்டம் அடித்து வந்தது.
இந்த முதலில் காய்த்த முந்திரி கொட்டை பிறகு பூத்து காய்க்க தொடங்கிய முந்திரியை பார்த்து தான் தான் முதலில் வந்தனான் என்று பெரிய கதைகளை கதைத்து வந்தது.ஒரு நாள் பண்ணையாரின் தோட்டத்தில் வேலை செய்த ஒருவர் ஒரு முந்திரி பெரிதாக வளர்ந்திருப்பதை பார்த்து பண்ணையாரிடம் சொன்னார்.
அடுத்த நாளே பணனையார் அந்த முந்திரியையும் முந்திரி கொட்டையும் புடுங்கி வறுத்து பருப்பாகிக்கொண்டார் அதேபோல முந்திரியை வெட்டி சாறாக்கி கொண்டனர்.இதிலிருந்து நாம் இந்த முந்திரி கொட்டை போன்று முன்னுக்கு முன்னுக்கு தேவையில்லாத விடயங்களை பேசுவதன் மூலம் எமக்கு மட்டும் இல்லாமல் எம்மை சார்ந்தவர்களுக்கும் தான் துன்பங்கள் உண்டாகும்.