ஊரில் பெரிய சண்டிய ஒருவர் இருந்தா அவர் தனது சண்டித்தந்த்தை பயன்படுத்தி ஊர் மக்களது பொருட்கள் காணிகள் சொத்துகளை களவாடி கொண்டிருந்தார் பின்னர் பக்கத்து ஊருக்கும் சென்று அங்கும் தனது சண்டித்தனத்தை பயன்படுத்தி சொத்துக்களை சேதமாக்கி வந்தார்.
இவ்வாறு தான் களவாடிய சொத்துகளை வைத்து ஆடம்படரமாக இருந்து வந்தார்.இவ்வாறு இருந்த நேரத்தில் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். சிறந்த வைத்திய மூலம் பல வைத்தியங்கள் செய்தும் பலனளிக்கவில்லை. அந்த நிலையில் தனது இறுதி ஆசையாக மூன்று ஆசைகள் கூறிவிட்டு இறந்தார் அந்த வகையில் அவர் கூறிய மூன்று ஆசைகளாக
1.தான் இறக்கும் தருவாயிலும் நல்ல வைத்தியர்கள் மூலம் தனது உயிரை காப்பாற்ற போராடினார்கள் என்று ஊர்மக்கள் அறிய வேண்டும் என்றார்
2.தான் சேகரித்த அனைத்து சொத்துகளையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் படியும் கூறினார்.
3.தான் இறந்த பிற்பாடு தனது உடலை சவப்பெட்டிக்குள் வைக்கும் போது தனது கையை வெளியே தெரியும் படி வைக்க சொன்னார்.( அதாவது இவ்வளவு பணம் சேர்த்தும் வெறும் கையுடனேயே போவதாக அது குறிக்கும்)
ஊர் மக்கள் அவரது இறுதி பயணத்தை பார்த்து இவ்வளவு சேர்த்தும் ஒன்றுமில்லாமல் தான் இறுதியில் போக வேண்டும் என கூறினார்கள்.இதன் படி நாம் கடினமாக வேலை செய்து சேர்த்த பணமே இறுதியில் நம்மோடு வராது என்கின்ற போது மற்றவர்கள் கஷ்டப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் சொத்துக்கள் எப்பிடி நம்மோடு வரும் இருக்கும் வரை மக்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டு இறக்கவேண்டும்.