முதல் பரிசு பெற்ற மேடைப்பேச்சு !

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் அவசியமா?

நேரம் குறுகியதாக இருப்பதனால் நடுவர் அவர்களுக்கும்  நற்தமிழ்  மக்களுக்கும் வணக்கம் கூறி நேரடியாக எனது பேச்சிற்குள் செல்கிறேன்.

உலகத்தில் வசித்து வரும் மக்கள் அனைவரும் தத்தமது மொழியிலே பேசிவரும் நிலையில் அவர்களது மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம்  தமிழ்மொழியில் பேசுவதையிட்டு பெருமையடைகிறேன்.பல மொழிகளை கசடறக்கற்ற பாரதி கூறுகையில் யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி  போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறிப்பிட்டுள்ளார். அப்படியான பெருமை மிக்க தமிழ் மொழியினை பேசுவதிலே என்ன வெட்கம் என்ன கவலை என்ன வருத்தம்?

தமிழ் மொழியானது கடவுளால் பேசிய மொழியாகும்.அவ்வையே சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று தமிழ்மொழியில் முருகன் கேட்டது அது மிகவும் சிறப்பான விடயமாகும். இன்று பல பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அதிலும் குறிப்பாக லண்டன் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் மூத்த மொழிகளில் முதன்மையான மொழியாக தமிழ் மொழி பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் மொழிதின பெருமை கண்டு வேற்றினத்தவர்கள் கற்றுகொண்டிருக்க நமது பிள்ளைக்களுக்கு ஏன் நாம் நமது தாய் தமிழ் மொழியை கற்பிப்பதில் என்ன தவறிருக்கிறது.

தமிழ் மொழிதின் பெருமையின உலகறியசெய்ய விடாமல் இன்று மட்டும் வேற்றினத்தவர்கள் அதை மூடி மறைக்க படும் பாடுகளில் இருந்து புரிகிறதா தமிழ் மொழி பெருமை.

எம்மை ஆண்ட பல மன்னர்கள் தமிழ் மொழிதை கற்க  விடாமல் தடுத்தும் எனது முன்னோர்கள் கட்டி காத்து இன்றுவரை காப்பாற்றப்பட்ட தமிழ் மொழிதை கற்பதில் என்ன தவறு இருக்கிறது.

13 கோடி தமிழர்கள் இருந்தும் தமிழர்ளுக்கு ஏன் தனி நாடு இல்லை தெரியுமா மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே    700 ஆண்டுகளாக தமிழ் நாட்டை இன்று வரை ஒரு தமிழன் கூட ஆளவில்லை அதனால் தான் நான் கூறுன்கிறேன் தமிழ் மொழியை நாம் வருங்கால சந்ததிக்கு ஒப்படைக்க வேண்டும்.

நேரம் குறைவானதாக இருப்பதானால் நடுவர் அவர்களே தாயை குறை கூறினாலும் மன்னித்து விடுவோம் தமிழ் மொழியை குறை கூறினால் மன்னிக்க மாட்டோம். என்று கூறி எங்களுக்கு நல்ல தீர்ப்பு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

 

தமிழ் மொழியை காப்போம்  நாட்டை மீட்போம்!

நாம் தமிழர்