உலக அதிசயங்கள் என்று எடுத்து நோக்கும் போது 7 அதிசயங்கள் உலகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கவையாகும்.இதன் பிரகாரம் எட்டாவது அதிசயத்தை பற்றி எமது இணையத்தளத்திற்கு கிடைத்த வரவேற்பு அளப்பெரியது அதன்படி உலகின் முன்னைய எட்டு அதிசயங்கள் தொடர்பான கட்டுரையை எமது முன்னை பகுதியில் நோக்கலாம்.
இதன் படி உலகில் ஒன்பதாவது அதிசயம் எதுவென்று தெரிவிப்பதற்கு முதல் சில விடயங்களை நாம் நாம் நோக்க முடியும்.
தற்போது உலகம் பூராக சுமார் 7000 மொழிகள் பேசப்படுகின்றன ஆனால் அந்த 7000 மொழிகளில் வெறும் 23 மொழிகள் மட்டும் தான் உலக மக்கள் தொகையில் அதிகமாக பேசப்படுகின்றன.இன்று பேசப்படும் மொழிகள் வெவ்வேறு மொழி குடும்பங்களைச் சேர்ந்தவை என்றாலும் அவற்றின் தோற்றம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது.
தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழியாகவும், திராவிடக் குடும்பத்தின் பழமையான மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மொழி பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. கடலுக்குள் மூழ்கி போன லெமூரியா கண்டத்தில் தமிழ் தான் பேசப்பட்டு வந்ததாம்.
உலகின் முதல் மொழி மற்றும் மூத்த மொழி சந்தேகத்திற்கு இடமின்றி தமிழ் தான். கிறிஸ்துவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மொழி புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழ் மொழியே இருந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி மக்கள் பேசியதற்கான ஆய்வுகூறுகள் இன்று வரை தொல்லியல் மூலம் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் இரண்டே ஒன்று சிங்கப்பூர் அடுத்தது இலங்கை,தமிழ் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது ஏனெனில் : இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழி இல்லை அதே போல் தமிழ் நாடு தனிநாடும் இல்லை, இந்தியக் கடவுச்சீட்டில் (passport) தமிழ் இல்லை!
இந்தியா, மொரிசியஸ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் நாணயத் தாள்களில் தமிழில் எழுதப்பட்டுள்ளது குறிப்பாக மொரிசியஸ் நாணயத்தாளில் தமிழ் எண்களிலும் எழுதப்பட்டுள்ளது அதேபோல் மொரிசியஸ், இலங்கை நாணயத்தாள்களில் அதன்பெறுமதியும் அந்த நாட்டின் பெயரும் தமிழில் எழுதப்பட்டுள்ளது சிங்கப்பூர் நாணயத்தாள்களில் அந்த நாட்டின் பெயர் மட்டுமே தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்தியாவில் நாணயத்தாளின் பெறுமதி மட்டுமே தமிழில் உள்ளது, சிங்கப்பூர் இலங்கை சில்லறை நாணயத்திலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
உலகத்திலேயே ஒரே ஒரு நாட்டின் கடவுச்சீட்டில் மட்டுமே தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளது அது இலங்கையின் கடவுச்சீட்டில் மட்டுமே
ஆசியாவின் கூட்டமைப்பில் (தென்கிழக்கு ஆசியா) தமிழும் ஒரு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இதன் பிரகாரம் தமிழ் மொழிக்கு பிற்பாடு தோற்றம் பெற்ற மொழிகளுக்கும் அவர்கள் சார்ந்த இனங்களுக்கு தனித்தனியே நாடுகள் காணப்படுகிறது ஏன் ஆதி காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பிரிந்து சென்ற சிங்கள மொழிக்கு கூட நாடு என்ற ஒன்றை கொண்டுள்ளது ஆனால் கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்று கூறும் அந்த தமிழ் மொழிக்கும் அவர்கள் சார்ந்த தமிழர்களுக்கும் தனி நாடு இன்றுவரை இல்லை என்பது உலக அதிசயமாக கொள்ள முடியும்.