29.09.2024 அன்று அந்தோணியார் புரம் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தினால் மன்னார் வவுனியா, கிளி நொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு. ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி 40 வயதிற்கு மேற்பட்ட மூத்த வீரர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பள்ளிமுனை 40 வயது மேற்பட்ட அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
இறுதிப்போட்டியில் கிளிநொச்சி கண்டவளை மற்றும் பள்ளிமுனை அணியினர் மோதிக்கொண்டனர். இறுதிப்போட்டியில் 1:1 என்ற நிலையில் சமனிலை தவிர்ப்பு உதையில் 4:3 என்ற கோல் கணக்கில் பள்ளிமுனை அணி சம்பியனானது.
புனித லூசியா அன்னைக்கு நன்றி