ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் நேற்றையதினம் எமது பள்ளிமுனை மைந்தன் றெஜினோல்ட் அன்ரனியின் ஏற்பாட்டில் அவரது தினுசா ரேக் அவுட் அண்ட் கேற்றரிங்கில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்படி அவரது உணவகத்திற்கு வருகை தந்த பலரும் அஞ்சலி செலுத்தியதை காணமுடிந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.