இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2024 இறுதிப்போட்டியில் 2 – 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பள்ளிமுனை அணியினருக்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பல ரசிகர்கள் இருந்து வந்துள்ள நிலை 1939 ம் ஆண்டிலிருந்து இன்று வரை எமது அணியினரின் சிறப்பான செயற்பாட்டினை கெளரவிக்கும் முகமாக இந்த சுற்றுப்போட்டியில் சிறப்பாக ஜொலித்த மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் இந்தியா பட்டுக்கோட்டையை பூர்விகமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை குடும்பம் நன்கொடையாக வழங்கியுள்ளார் அவருக்கு அவரது குடும்பத்திற்கும் புனித லூசியா அன்னையின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்.
இதன் படி பரிசுத்தொகை கிடைத்த வீரர்கள் விபரம்
1.என். ஜே. தனஞ்சயன்
2. எம்.சதூசியன்
3.ஜே.ஜெபனேசன் ரோச்
அதே போல் எமது அணியினருக்கு சிறப்பாக ஊக்குவிப்பு வழங்கிய பார்வையாளர்கள் நூற்றுக்கணக்கானோரில் ஒருவரையும் தெரிவு செய்யப்பட்ட டக்ளஸ் பேடினன் என்பவருக்கு 5000/= செல்லத்துரை குடும்பம் வழங்கியுள்ளது. அவருக்கு நன்றிகள் கோடி.