வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த போட்டி!

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடத்தப்படும் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி 2024 சுற்றுப்போட்டி 18.09.2024  இன்று பள்ளிமுனை புனித லூசியா மைதானத்தில் புனித லூசியா அணியை எதிர்த்து புனித சூசையப்பர் அணி பனங்கட்டுகொட்டு அணி விளையாடியது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆராவரத்தில் பள்ளிமுனை அணி தனது சொந்த மண்ணில் விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. எமது அணி வீரர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் போட்டி வெற்றி தோல்வின்றி சமநிலையில் முடிவடைந்தது.

வலைப்பாடுடன் இடம்பெற்ற கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியின் பல வீரர்களுக்கு உபாதை ஏற்பட்ட காரணத்தினால் இப்போட்டியில் அவரகள் பங்குபற்றாதாதன் காரணத்தினால் போட்டியில் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை.