நிலுக்சனின் இரட்டைக் கோலின் மூலம் சென் அன்ரனிஸ் அணியை வீழ்த்தி சம்பியனானது புனித லூசியா விளையாட்டுக் கழகம் பள்ளிமுனை.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2024 இறுதிப்போட்டியில் 2 – 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தொடக்கம் முதலே ஆதீக்கம் செலுத்தி வந்த லூசியா அணி வீரர்கள் முதல் பாதி ஆட்டதின் இறுதி நேரத்தில் நிலுக்சன் கோல்களை அடித்து ஆரம்ப வெற்றியை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் இரண்டாவது கோலினையும் பெற்று மூன்று லட்சம் ரூபா பணப்பரிசினையும் வெற்றிகேடத்தையும் சுவீகரித்து கொண்டது.
வெற்றி பெற்ற நமது வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு நமது வீரர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவிற்கான நிதியினை கையளித்த பள்ளிமுனை தொழிலதிபர்கள் மற்றும் ஊக்கமளித்த ஊர் மக்கள் மற்றும் நிதியினை பெற்றுகொடுத்த கனடா நாட்டில் வசிக்கும் பள்ளிமுனை மைந்தன் திரு அன்ரனி றெஜினோல்ட்ற்கும் நன்றிகள். புனித லூசியா அன்னைக்கு நன்றி.
-நெய்தல் ராணி-