இன்று 73வது பிறந்த நாள் கொண்டாடும் கனடாவில் வசிக்கும் பள்ளிமுனை மைந்தன் வைத்தியர் விக்டர் ஜோன் பிகிராடோவிற்கு எமது பள்ளிமுனை இணையத்தளத்தின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதோடு நெய்தல் ராணியின் வாழ்த்து கவியினையும் இணைத்துள்ளோம்.
இவர் வசந்த கானம் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் அத்துடன் திருக்குறளில் மருத்துவதுறை சார்ந்து ஆய்வு செய்து “திருக்குறளும் மருத்துவமும்” என்ற நூலினை படைத்துள்ளார்.இவர் இயக்கி நடித்த திரைப்படம் ஓட்டை மற்றும் இவர் ஒரு வில்லுப்பாட்டு கலைஞராக காணப்பட்டமை மற்றுமொரு சிறப்பாகும்.
பள்ளிமுனையில் உதித்த பகலவரே வாழ்க பல்கலையும் கற்றவரே பல்லாண்டு வாழ்க புனித லூசியா நாமம் கொண்ட அன்னை பெற்றவரே வாழ்க
ஜேசுவின் மறுபெயராம் மனுவலின் மகனே வாழ்க கல்வியில் உயர்ந்தவரே பல்லாண்டு வாழ்க உதைபந்தாட்டதில் சிறந்தவரே வாழ்க வடமாகாண சம்பியனே பல்லாண்டு வாழ்க
பள்ளிமுனையின் முதல் மருத்தவரே வாழ்க முத்தமிழும் கற்றவரே பல்லாண்டு வாழ்க மரியாவின் மதிப்பிற்குரிய சகோதரரே வாழ்க சேவியரின் சிறப்பான மைத்துனனே பல்லாண்டு வாழ்க
மேரியை கைவிடாமல் கரம் பிடித்தவரே வாழ்க ஜேசுவின் மறு பெயராம் மனுவலை பெற்றேடுத்தவரே பல்லாண்டு வாழ்க பிரியமான பிள்ளையை பிரியாவாக பெற்றெடுத்தவரே வாழ்க மதியை முகமாக கொண்ட நிலாவை பெற்றெடுத்தவரே பல்லாண்டு வாழ்க
கனடாவின் வசந்த கானமே வாழ்க திருக்குறளின் மருத்துவ விளக்கம் சொன்னவரே பல்லாண்டு வாழ்க வில்லை தட்டி இணுவிலில் இறக்கியவரே வாழ்க பாப்பையாவுடன் பட்டிமன்றம் நடத்தியவரே பல்லாண்டு வாழ்க
பல தங்க மாலைக்கு சொந்தக்காரரே வாழ்க சுனாமியின் தொண்டரே பல்லாண்டு வாழ்க ஓட்டை நாடகத்தில் நடித்தவரே வாழ்க பேரதேனியாவில் படித்தவரே வாழ்க
சென்சேவியரில் சிறகு விரித்தவரே வாழ்க ஹாட்லியின் கதிரோனே பல்லாண்டு வாழ்க !
– நெய்தல்ராணி –


