பள்ளிமுனை மக்களே விழித்தெழுங்கள்! நெய்தல் ராணியின் அன்பு வேண்டுகோள்!

மன்னார் பள்ளிமுனை மீனவர்களின் ஏறக்குறைய 30வருட நீண்ட கால போராட்டத்தின் பின் தற்போது பள்ளிமுனை கடல் ஆற்று பகுதியில் இருந்து கடற்கரைவரையான கடல் ஓடைபகுதி 800M தற்போது தூர் வாரப்படுகின்றது.

பள்ளிமுனை மீனவர்கள் ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் வைகாசிமாதம் 15 தொடக்கம் புரட்டாசி மாதம் 15வரை (சோளவகாற்று) கடற்பகுதி நீரின்றி வற்றிய நிலையில் காணப்படுவதுடன், தமது மீன் பிடி உபகரணங்கள் முதல் பிடிக்கும் மீன்கள் அனைத்தையும் தமது தோள்மீது சுமந்து வரவேண்டிய அவல நிலை காணப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது .

தற்போது இதற்கான முன்னெடுப்பினை பள்ளிமுனை மீனவர் கிராமிய அமைப்பு மற்றும் பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் இந்த செயற்பாடனது வெறும் கண் துடைப்பு போன்று இடம்பெறுகின்றது. அதாவது பள்ளிமுனையின் வட கடல் மற்றும் தென் கடலினை கருத்தில் எடுக்காமல் வெறுமென எல் வடிவத்தில் வட கடலை மாத்திரம் இணைப்பதாக காணப்படுகிறது ஆனால் வட கடல் மற்றும் தென் கடலை இணைப்பதற்கு [ ]வடிவத்தில் ஆளமாக்கினால் மீன்பிடியாளர்களுக்கு பெரிதும் உதவுவதாக அமையும்.

எனவே பள்ளிமுனை மக்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாது பள்ளிமுனை நலன் விரும்பிகள் இதனை உரிய அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்துக்கொள்கிறேன்.

”நெய்தல் ராணி”