பள்ளிமுனை மைந்தனால் மருத்துவ உதவிக்காக சேர்க்கப்பட்ட 1.1 மில்லியன்!

பள்ளிமுனையைச்சேர்ந்த  பி.குயின்ரஸ் மார்ஸ்ல் பிகிறாடோ என்பவரது  இரு சிறுநீரங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 3 பிள்ளகைள் உள்ளனர் 3வரும் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர் அவரது பிரதான தொழில் கடற்தொழில் தற்போது அவரால் தொழில் செய்ய முடியாமையால் குடும்பம் மிகவும் கஸ்டப்பட்டு வந்துள்ளது.

அத்துடன் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ருபாய் 80 லட்சம் தேவைப்படுவதாக பள்ளிமுனை மைந்தன் நோபேர்ட் அன்ரனியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது அதன் பிரகாரம் அவரது கடுமையான முயற்சியால் 1.1 மில்லியன் ரூபா சேர்க்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.