பள்ளிமுனை வைரத்திற்கு வைர விழா!

பள்ளிமுனையின் வைரமான நோர்பேர்ட் அன்ரனி அவர்களுக்கு வைரவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

கனடாவில்  சாதித்து வரும் பள்ளிமுனையின் மைந்தன் நோபேர்ட் அன்ரனி. கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் பிரம்ரன் நகரத்தில் தினுசா ரேக்  அவுட் உணவகம் மற்றும் சிறு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் கனடாவிற்க்கு வரும் போது வெறுகையுடனே வந்தவர் என்பதும் அவரது முயற்சியினால் இன்று கனடாவின் பிரம்ரன் நகரில் மிகச்சிறந்த உணவகமாக காணப்படுவதும் சிறப்பாகும்.

பள்ளிமுனை மைந்தன் என்ற வகையில் கிராமத்திற்கான  முன்னேற்றதிற்காக பல சேவைகளை செய்வதோடு மட்டமல்லாமல் இன்னும் பல சேவைகள் செய்ய காத்திருக்கின்றார்.இன்றைய கனடாவின் வேலை வாய்ப்பு அற்ற நேரத்தில் இன்றும் பலருக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளார்.

இந்த வகையில் அவர் நீண்ட ஆயுளோடு மகிழ்வுடன் வாழ புனித லூசியா அன்னையை வேண்டி கொள்வோம்!