அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான இளம் விவசாய விஞ்ஞானிகள் தெரிவுப்போட்டியில் மன்னார் புனித லூசியா மாணவர்களில் மூன்று மாணவர்கள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டனர்.
1.ஆன் பிறீத்தி பிகறாடோ
2.சஜானி பிகிறாடோ
3.எஸ்.பானுஜா
இவர்கள் மூவருமே இந்த போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தை பெற்றுக்கொண்டனர்.இதன் மூலம் எமது பள்ளிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளனர்.இந்த கடல் மீன் குஞ்சுகள் விவசாயத்தில் புகுந்து தங்கப்பதக்கதை பெற்றுள்ளனர்.
இந்த விடயம் பெரிய வியப்பான விடயம் இவர்கள் பங்குபற்றிய போட்டி இவர்கள் சார்ந்த போட்டியல்ல இதன் மூலம் நமது மக்கள் கொடுக்கும் ஊக்கமானது எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் எமது பள்ளிமுனை மண்ணின் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
எனவே புலம்பெயர்ந்த எமது உறவுகள் உங்களது இதயக்கண்ணை திறந்து எமது பாடசாலைக்கு உதவிகளை கொடுத்து எமது மண்ணை வளர்ச்சியடை பங்களிக்க வேண்டும்.