ஒரு ஊரில் தாத்தா ஒருவர் நல் மதிப்புடன் இருந்த அவர் ஒரு நாள் கருவாட்டை திருடிய காரணத்தால் கருவாடு திருடிய தாத்தா வீடு என்று பரம்பரை பரம்பரையாக அந்த பெயர் வந்ததது.இந்த வகையில் பரம்பரை என்பதை பார்க்கும் போது முதலாவதாக நான் அடுத்து அம்மா அப்பா அடுத்த தலைமுறை பாட்டன் பாட்டி அடுத்த தலைமுறை பூட்டன் பூட்டி அடுத்த தலைமுறை ஓட்டன் ஓட்டி அடுத்த தலைமுறை சேயோன் சேயோள் அடுத்த தலைமுறை தான் பரன் பரை என்று பரம்பரையானது .
இந்த பரம்பரையான பெயரை மாற்றுவதற்காக அந்த பேரன் ஒவ்வொரு நாளும் தமது வீடு தேடி வருபவர்களுக்கு சோறு கொடுத்து வந்தான் இது நாளடையில் கருவாடு திருடிய தாத்தா வீடு என்ற பெயர் போய் சோறு கொடுத்த தாத்த வீடு என்று மாறியது.