நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலமை காரணமாக மக்கள் இடம்பெயந்த காலத்தில் ஒருவர் இடம்பெயர்வார். அந்த காலகட்டத்தில் தமது உடமைகளை சாக்கு மூட்டைகளில் கட்டிகொண்டு செல்வதே நிலமை. இந்த நிலையில் தங்கள் தங்கள் சாக்கு மூட்டைகளை எடுத்து கொண்டு ஊர் ஊராக இடம்பெயர்கின்றனர்.இந்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் தம்பி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த தம்பி இறுதியாக வந்த ஊர் பள்ளிமுனை . வந்து சேர்ந்தவர் தனது சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அளவுக்கதிகமான பணம் இருந்தது அதனை பார்த்த அவர் மிகுந்த சந்தோசத்தில் குதூகலித்தார்.இந்த நிலையில் ஊரில் யாரும் தங்க இடம் இல்லா நிலையில் மரியம் என்பவரின் வீட்டில் தங்குகின்றார்.
ஒரு நாள் கடற்கரையோரமாக நடந்து செல்கிறார் அந்த நேரத்தில் கடற்கரையொரத்தில் சம்மாட்டியார் ஒருவர் கவலையுடன் இருப்பதை அவதானிக்கிறார் பின்பு அவரிடம் சென்று “ என்ன சம்மாட்டியார் கவலையாக இருக்கிறீங்கள் “ என்று கேட்டார். அதற்கு சம்மாட்டியார் “ தம்பி இப்ப சோளக்காத்து வீசுது கரைவலை போட்டா தான் காசு பார்க்கலாம்” என்கிறார். உடனே அந்த தம்பி “சம்மாட்டியார் இப்ப என்ன தேவை உங்களுக்கு என்று” கேட்க “ இப்ப என்னட்ட காசில்லை காசிருந்தா கரை வலை போடலாம் என்று சொல்ல உடனே வாருங்கள் தருகிறேன் என்று கூட்டிசெல்கிறார்.
தனது சாக்கு மூட்டையில் இருந்த பணத்தினை அள்ளி சம்மாட்டியிடம் கொடுக்க சந்தோசமாக சென்ற சம்மாட்டியார் அடுத்த நாளே கரை வலை போட்டு அதில் அதிகமான மீன்களை அள்ளினார்.உதவி செய்த தம்பிக்கு நாளுக்கு நாள் பாரையும் திருக்கையும் கொடுத்து சந்தோசமாக இருந்தார்.
சில தினங்களில் சம்மாட்டியார் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்க கரை வலையில் கிடைத்த வருமானத்தில் அமோகமா கொண்டாட்டம் நடைபெற இரண்டு நாட்கள் கொண்டாட்டம் நடைபெற முதல் நாள் வந்தவர்கள் குளிர்பானங்களை அருந்தியதால் அடுத்த நாள் முடிவடைந்து இருக்க என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிய சம்மாட்டியாரை கண்ட மரியம் அக்கா நடந்ததை தம்பியிடம் சொன்னார். தம்பி சம்மாட்டியாரின் நிலை அறிந்து வண்டி நிறைய குளிர்பானங்களுடன் வந்திறங்கினார்.
தம்பியின் செய்றபாட்டால் மட்டற்ற சந்தோசத்தில் இருந்த சம்மாட்டியார் பை நிறைய பலகாரங்களை கொடுத்து அனுப்பினார். தம்பியின் இந்த உதவும் எண்ணத்தை அறிந்த அயல் ஊரவர்கள் மற்றும் நோய் வாய் பட்டவர்கள் என பலரும் உதவிக்கு வந்து சேர்ந்தனர்.
நோய்வாய் பட்டவர்கள் தாங்கள் பிச்சை எடுக்கிறோம் எஙகளுக்கு உதவி செய்தால் நாங்கள் பிச்சை எடுப்பதை விடுத்து நன்றாக வேலை செய்து சந்தோசமாக இருப்போம் என அவரும் ஜோசிக்காமல் வாருங்கள் என்று கூட்டி சென்று பணத்தினை பிரித்து கொடுத்து அனுப்பினார்.
உதவி வாங்கியவர்கள் பெரிய சந்தோசத்தில் திரும்பினார்கள். நாட்கள் செல்ல தம்பியிடம் உதவி வாங்கியவர்களில் ஒருவர் மீண்டு திரும்பி வந்து உங்கள் உதவியால் நான் இன்று நல்ல சந்தோசமாக இருக்குறேன் என்று சொல்லி நன்றி கூற தம்பி மற்றவர்கள் எங்கே அவர்கள் சந்தோசமாக இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் மெளனமாக இருக்க அவர்களுகாக பன்றிகள் வாங்கி வைத்தேன் எல்லாவற்றையும் நீயே கொண்டு சென்று வளர்த்து உனது வியாபாரத்தை பெருக்கு என்றார் தம்பி.
– நன்றி இல்லாதவருக்கு கடைசியில் பன்றி கூட உதவாது-
“மொறின் றோச் ”