வெற்றி பெற்றால் இரண்டு லட்சம் – நெய்தல் ராணியின் சவால்!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2024 இறுதி போட்டிக்கு பள்ளிமுனை புனித லூசியா அணி தெரிவாகியுள்ளமை ஏற்கனவே எமது இணையத்தளத்தினூடாக அறியத்தந்திருந்தோம்.அந்த வகையில் 15.09.2024 அன்று இறுதிப்போட்டி இடம்பெற உள்ளது.

இந்த போட்டியில் பள்ளிமுனை புனித லூசியா அணி வெற்றி பெறும் இடத்து அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களை இன்பசுற்றுலாவாக திருகோணமலைக்கு போகும் செலவாக இரண்டு லட்சம் பணத்தினை கொடுப்பதாக நெய்தல் ராணி முடிவு செய்துள்ளார்.

வீரர்களே இந்த சந்தர்ப்பதினை பயன்படுத்தி கொள்ளுங்கள் நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா?