நெய்தல் ராணியின் அன்பு வேண்டுகோள்!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2024 இறுதி போட்டிக்கு பள்ளிமுனை புனித லூசியா அணி தெரிவாகியுள்ளமை ஏற்கனவே எமது இணையத்தளத்தினூடாக அறியத்தந்திருந்தோம்.அந்த வகையில் 15.09.2024 அன்று இறுதிப்போட்டி இடம்பெற உள்ளது.

இதன் படி எமது அணி வீரர்களின் இறுதிப்போட்டிக்காக அவர்களது போக்குவரத்து மற்றும் உணவிற்காக நாம் புலம்பெயர் பள்ளிமுனை உறவுகளிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளோம். இதன் படி கடந்த முறையும் எமது அணி வீரர்கள் இறுதிப்போட்டி வரை முன்னேறி முறையான போக்குவரத்து போசாக்கான உணவின்மை காரணமாக தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்கமைய நமது வீரர்களை நாம் ஊக்குவித்து அவர்களை தேசிய அளவில் வெற்றிபெற வைக்க வேண்டியது எமது கடமை எனவே எமது உறவுகள்  அவர்களுக்கான உதவியினை கொடுத்து ஊக்குவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். கனடாவில் உள்ள உறவுகள் எமது பள்ளிமுனை மைந்தன் அன்ரனி நோபேர்ட் அவர்களிடம் கையளிக்குமாறும் ஏனையவர்கள் pallimunaip@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்பு கொள்ளவும்.

– நெய்தல் ராணி –