இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிமுனையிலிருந்து வெளிவந்த இறுவெட்டு!

“நீயே நிறைவு”என்ற இறுவெட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிமுனை புனித லூசியா ஆலயத்தின் பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது.யுத்த காலத்திலும் பாரிய சிக்கல் நிறைந்த காலத்திலே புனிதா லூசியா அன்னையின் பெருமைகளை உலகறியச்செய்ய இவ் இறு வெட்டு வெளியானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த இறு வெட்டானது பள்ளிமுனை இளைஞர் யுவதிகளால் உருவாக்கப்பட்ட சங்கமம் இசைக்குழுவின் தயாரிப்பில் அருட் தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் நெறிப்படுத்தலில் வெளியானமை முக்கியமான அம்சமாகும்.இதன் காணொளி வடிவங்கள் எமது பள்ளிமுனை யூரியூப் தளத்தில் தொடர்ச்சியாக வெளிவரும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.