மன்னார் புனித லூசியாவிற்கு மாகாண மட்ட விளையாட்டில் கிடைத்த கெளரவம் !

கடந்த வாரம் மாகாண மட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.இதன் பிரகாரம் மன்னார் புனித லூசியா மகாவித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 20,18,16 வயது பிரிவினை கொண்ட உதைபந்தாட்ட அணியினர் பங்கு பற்றியிருந்தனர்.

சிறப்பாக பங்கு பற்றிய 18 வயது ஆண்கள் உதைபந்தாட்ட அணியினர் இறுதி வரை வெற்றிக்காக போராடியிருந்தனர்.எனினும் இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பு தட்டி சென்றாலும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று நமது பள்ளிமுனை மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற 18 வயது ஆண்கள் அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு ஏனைய பங்கு பற்றிய 16,20 வயது பிரிவினருக்கு   வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம்.

மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களது போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்கு கனடாவிலிருந்து உதவிய நல்லுள்ளங்களுக்கு பாடசாலை அதிபர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.