பள்ளிமுனை மாணவர்களுக்காக குறுகிய காலத்தில் லட்சங்களை கொடுத்த புலம்பெயர் தமிழர்கள்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எமது இணையத்தளமூடாக மன்னார் புனித லூசியா மகாவித்தியாலய பழைய மாணவர்களது கோரிக்கையினை வெளியிட்டிருந்தோம்.

அதன் படி மன்னார் புனித லூசியா மகாவித்தியாலய மாணவர்களது விளையாட்டு மற்றும் திறனாய்வு போட்டிகளுக்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளுக்காக 300000/= கோரியிருந்தோம். அதற்கமைய கோரி இரண்டு நாட்களில் கனடாவில் வசிக்கும் பள்ளிமுனை மைந்தன் நோர்பேர்ட் அன்ரனியின் கடும் முயற்சியினால் அந்த பணத்தினை பெற்றுகொடுத்துள்ளோம்.

இதன் படி மாணவர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

றெஜினோல்ட் ஜெயா குடும்பம் (பள்ளிமுனை) 50000/=

தீபன் விக்கினேஸ்வரன் (வவுனியா) 50000/=

ரதீசன் சிறினிவாசகம் ( வவுனியா ) 30000/=

கு.சஜீப்தன் (வவுனியா) 25000/=

செபமாலை ரவி பிகிராடோ  (பள்ளிமுனை) 25000/=

 

வைத்தியர் ஜோன் மேரி குடும்பம்  (பள்ளிமுனை) 25000/=

குயின்ரஸ் சாந்தி குடும்பம் (பாசையூர்) 25000/=

மகாலிங்கம் குடும்பம்  (பரந்தன்) 20000/=

கலைசெல்வி  குடும்பம் (வவுனியா) ( ருஜீபன்) – 25000/=

 

சிவ சக்தி குடும்பம் (உரும்பிராய்) 25000/=

 

 

பல பள்ளிமுனை மக்களும் உதவி செய்ய முன் வந்த நேரத்திலும் குறுகிய நேரத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் ஏற்று கொள்ள முடியவில்லை.அதன் படி இனிவரும் காலங்களில் இடம்பெறும் உதவித்திட்டங்களில் அவர்களை உள்ளீர்த்து மேற்கொள்வோம்.