உதவிக்கரம் நீட்டுமாறு கனடா வாழ் பள்ளிமுனை மக்களிடம் கோரிக்கை!

கனடா வாழ் பள்ளிமுனை மக்களுக்காக மன்னார் புனித லூசியா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் உதவி கேட்டு கடிதம் வெளியிட்டுள்ளது இதன் படி !

அன்புக்குரிய கனடா வாழ் பள்ளிமுனை மக்களே!

நமது பாடசாலையானது வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் 1c தரமுடைய 135 ஆண்டுகள் வரலாற்றைக்கொண்ட பாடசலை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கடந்த காலங்களில் வலயத்திலும் மாகாணத்திலும் தேசியத்திலும் பலசாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.நடைபெற்று முடிந்த மாகாண மட்ட போட்டிகளில் யூடோ போட்டியில் 1,2,3,4 ம் இடங்களை பெற்று தேசிய ரீதியிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோல் எதிர்வரும் 17,18,19 தினங்களில் வலயத்தில் 1ம் இடம் 2ம் இடங்களை பெற்ற குழுவினர் 16 வயது ஆண்கள் 1ம் இடம்,18 வயது ஆண்கள் 1ம் இடம்,17 வயது பெண்கள் 2ம் இடம் இவர்கள் 20,21,22,23,24 ஆகிய தினங்களில் மாகாணமட்ட போட்டியில் பங்குபற்றுவர்களாகும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.இவ் வீரர்களுக்கான உணவு,போக்குவரத்து மற்றும் தர செலவீனங்களுக்காக மூன்று இலட்சத்திற்கு அதிகமான பணம் தேவைப்படுகிறது.

இம்மாணவர்களின் வெற்றியின் பங்காளிகள் என்ற வகையில் இயன்ற உதவிகளை வழங்குவதன் மூலம் பாடசாலை வளர்ச்சிக்கு உதவ முடியும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உதவித்திட்டம்

17,18,19 – உதைபந்தாட்டம்

உணவு ஒரு நாள் – 48600 * 3நாள் = 145800

போக்குவரத்து – 100000

20,21,22,23,24 – மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

ஒரு நாள் – 10800*5 = 54000

குறிப்பு – நீங்கள் எங்கள் மாணவர்களிற்க்கு வழங்கும் உதவித்தொகையை கனடாவில் வசிக்கும் திரு அன்ரனி நோபேர்ட் அவர்களிடம் வழங்குமாறு கேட்டுகொள்கிறோம்.