பள்ளிமுனையிலிருந்து வெளிவந்த முதல் பத்திரிகை!

மன்னார் பள்ளிமுனையிருந்து 1998ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகை தான் “பள்ளியெழுச்சி” பத்திரிகை. இதனுடைய முதல் பதிப்பு வெளிவந்ததுடன் அது பள்ளிமுனை மக்களிடையே வரவேற்பை பெற்றது.

மன்னாரிலிருந்து 1998 ம் ஆண்டளவில் வெளிவந்த பத்திரிக்கையாக இதனை கொள்ளலாம். சில காரணங்களுக்காக இந்த பத்திரிகையின் அடுத்த அடுத்த பதிப்புக்கள் வெளிக்கொண்டுவர முடியவில்லை ஆனால் தொடர்ந்து பத்திரிகையின் அடுத்த அடுத்த பதிப்புகளை வெளிக்கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் படி இந்த முயற்சிக்கு பள்ளிமுனை மக்களின் மற்றும் மாணவர்களின் ஆதரவை வேண்டி நிற்பதோடு உங்கள் கவிதை கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அதில் தெரிவுசெய்யபடும் கட்டுரைகளுக்கு பரிசில்களுடன் எமது பத்திரிகையில் உங்கள் கட்டுரைகளும் கவிதைகளும் பிரசுரிக்கப்படும்.

கட்டுரைகள் கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி pallimunaip@gmail.com