மன்னார்,நானாட்டான், மடுமாந்தை பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்குமேற்பட்ட 7 அணிகள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி பள்ளிமுனை அணி அந்தோனியார் புரம்அணியை எதிர்த்தாடியது.
ஜோசப்வாஸ் நகர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை விளையாட்டு மைதானத்தில் 17/3/2024 ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் மின்னொளியில் நடைபெற்ற போட்டியில் பள்ளிமுனை அணி 4:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது.
இவர்களுக்கான முதலாவது இடத்தினை பெற்றுக் கொண்ட பள்ளிமுனை அணிக்கானபணப்பரிசிலையும்வெற்றிக்கேடயத்தினையும்மன்னார் மாவட்ட உதைபந்தாட்டத்தின் தந்தையான அருட்சகோதரர் ஸ்ரானிலஸ் அவர்களும் தோட்ட வெளி பங்குத் தந்தையான இராஜநாயகம் அடிகளாரும் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்ட அந்தோனியார் புர அணிக்கான வெற்றிக் தேடயத்தினையும் பணப் பரிசிலையும் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரின்ஸ் லெம்பேட் அவர்களும் ஜேசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டு கழக தலைவர் கிங்ஸிலி அவர்களும் மன்னார் நானாட்டான் மடு மாந்தை சொக்கோ மாஸ்டர் சம்மேளனத்தின்செயலாளர் றெயி ராஐநாயகம் அவர்களும் வழங்கி வைத்தனர்.
எமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், தெரிவித்துக்கொள்ளுகிறோம்.